உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம்தான் விக்ரம். இப்படம், நேற்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்றைய தினம் தமிழகத்தில் மட்டும் 800 க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும்,உலகமெங்கும் 5000 க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், வெளியாகியுள்ளது,
அதன்படி இப்படம் ரிலீஸ் ஆனா முதல் நாளில் உலகம் முழுவதும் 35 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாம். அன்பறிவு ,மாஸ்டர் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி இருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன்ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்,சூர்யா,விஜய் சேதுபதி நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டெலி கிராம் மற்றும் இணையதளத்தில் விக்ரம் படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனையடுத்து பைரஸி இணையதளங்களில் படம் வெளியாவதை தடுக்க லோகேஷ் கனகராஜ் சார்பில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!