கன்னடத்தில் 'ரகசிய ராத்திரி' என்னும் படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய ராதாரவி, தமிழில் நடிகர் கமலஹாசன் இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த 'மன்மத லீலை' படத்தில் நடித்தார் இந்த படமே தமிழில் இவருடைய அறிமுக படமாகவும் அமைந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்ன தம்பி, பூவெளி, உழைப்பாளி, குரு சிஷ்யன், என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார்.
இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில், நடித்துள்ள ராதாரவி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், என எந்த விதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதனை முன் வாங்கிக் கொண்டு நடிக்கும் திறமை கொண்டவர்.
'வீரன் வேலுத்தம்பி' என்ற படத்தில் மூலம் கதாநாயகனாகவும் நடித்த இவர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், மீண்டும் குணசித்ர வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ராதாரவி நடித்துள்ளார்.
இந்த நிலையில் ராதாரவி ஆபாசமாக பேசி தாக்கியதாக டப்பிங் யூனியன் உறுப்பினர் சங்கீதா என்பவர் அளித்த புகாரின் பேரில் ராதாரவி உட்பட 7 பேர் மீது 5 பிரிவின் கீழ் விருகம்பாக்கம் போலீசாரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!