நடிகர் விஜய்யின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மீது இயக்குநர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மூத்த நடிகரான சாயாஜி ஷிண்டே தெலுங்கு, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, போஜ்புரி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.அத்தோடு பல மொழிப்படங்களில் சாயாஜி ஷிண்டே நடித்திருந்தாலும், தமிழில் இவர் பாரதி பாடத்தில் சுப்ரமணி பாரதியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார்.அத்தோடு அந்த படத்தில் சாயாஜி ஷிண்டே தோற்றமும், மூசை, முண்டாசும் பாரதியை நினைவுப்படுத்தின. எனினும் இத்திரைப்படத்தை தொடர்ந்து பூவெல்லாம் உன் வசம், அழகி,பாபா போன்ற படங்களில் நடித்தார்.
அத்தோடு பல மொழிப்படங்களில் சாயாஜி ஷிண்டே நடித்திருந்தாலும், தமிழில் இவர் பாரதி பாடத்தில் சுப்ரமணி பாரதியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார். அந்த படத்தில் சாயாஜி ஷிண்டே தோற்றமும், மூசை, முண்டாசும் பாரதியை நினைவுப்படுத்தின. இத்திரைப்படத்தை தொடர்ந்து பூவெல்லாம் உன் வசம், அழகி,பாபா போன்ற படங்களில் நடித்தார்.
அழகிய தமிழ் மகன், வேலாயுதம்,வேட்டைக்காரன் என அடுத்தடுத்து விஜய்யின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். ஜெயம் ரவி , ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நகைச்சுவையில் பின்னிபெடல் எடுத்திருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குநர் சச்சின் போலீஸ்நிலையத்தில், அகில் பாரதிய மராத்தி திரைப்படக் கழகத்திலும் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், தனது தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிக்க சாயாஜி ஷிண்டேவை ஒப்பந்தம் செய்திருந்தேன்.எனினும் இதற்காக இவருக்கு அட்வான்சாக 5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டது.
மேலும் இப் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில், படத்தின் கதையை மாற்றும்படி கூறினார்.கதையில் மாற்றம் செய்ய முடியாது என்றதும் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சொன்னார். மேலும், படத்திற்காக அளித்த அட்வான்ஸ் தொகையும் திருப்பி தருவதாக கூறினார். ஆனால், அவர் இதுநாள் வரை அட்வான்ஸ் தொகையை திருப்பித்தரவில்லை. பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை என்றும், அப்படியே அழைப்பை எடுத்தாலும் ஏதாவது சாக்கு சொல்கிறார் என்றார்.
திடீரென சாயாஜி திரைப்படத்தை விட்டு வெறியேதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும். சயாஜி வாங்கிய து ரூ.5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்றும், காரணமே இல்லாமல் படத்திலிலுந்து வெளியேறியதால், ஏற்பட்ட இழப்புக்கான அனைத்து செலவுகளையும் நடிகர் ஏற்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சாயாஜி ஷிண்டே மீது வந்துள்ள புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
Listen News!