தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இசையமைப்பாளர் டி இமான் . இவர் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
மேலும் இவர் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது .
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை மறைத்துவிட்டு தனது முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார் என்று அந்த மனுவில் கூறி இருந்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில் தற்போது இமான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், அவரின் திருமணம் இம்மாதம் 15 ஆம் திகதி நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொலல்ப்படுகிறது. இது குறித்த சரியான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Listen News!