• Sep 21 2024

கே கே-இன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் கே கே தனது 53 வது வயதில் (மே 31) நேற்று முன்தினம் காலமானார். இவருடைய அகால மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடைய மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதநிலையில் அரசியல் வாதிகளும், தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், நண்பர்களும் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், மற்றும் தமன் ஆகியோர் தங்கள் இரங்களைத் தெரிவித்துள்ளனர். . ஹாரிஸ் ஜெயராஜ் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "என் 'உயிரின் உயிரே ' மறைந்தது . லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய “கொஞ்சி கொஞ்சி ” பாடலை உலகமேபுகழ்ந்து கொண்டிருக்கும் போது , இந்தச்செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நான் முற்றிலும் உடைந்து போய இருக்கின்றேன் அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்தான ட்விட்டர் பதிவில் யுவன் ஷங்கர் ராஜா, "நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம் .சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து தற்போதுகே கே வாழ்க்கை கணிக்க முடியாதது அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களைமிஸ் செய்கிறோம் கே கே எனத் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும் இது ஒரு மோசமான இழப்பு கே கே வின் மாயாஜாலக் குரல் மற்றும் இசை என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும் எனக் குறிப்பிட்டு தன் இரங்களைத் தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர்தமன் இது குறித்து, "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அற்புதமானதிறமை கொண்ட அற்புதமான மனிதர் இன்று நம்மிடம் இல்லை. கே கே-வின் ஆத்மா சாந்தியடையட்டும் வாழ்க்கை கணிக்க முடியாது.எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement