• Sep 21 2024

வாரிசு பட பிரபலத்திற்கு குவியும் வாழ்த்து; இது தான் விசயமா…. வைரலாகும் புகைப்படம் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான விஜய் நடிக்கும் 66-ஆவது படம் 'வாரிசு'.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். இப்படத்தினை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான தில் ராஜீ தயாரிக்கின்றார். வம்சி முதல் முதலாக நடிகர் பிரபாஸின் நடிப்பில் வெளியான 'முன்னா' என்ற படத்திலேயே இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தினையும் தில் ராஜு தான் தயாரித்து இருந்தார்.

அது மட்டுமல்லாது வம்சியின் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகியிருந்த 'யுவடு' படத்தினையும், அத்தோடு இணைந்து மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியாகியிருந்த 'மகரிஷி' படத்தினையும் தில் ராஜு தான் தயாரித்து இருந்தார். மேலும் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ராம் சரண் இணையும் 'ராம் சரண் 15' படத்தினையும் இவரே தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வருகின்ற 'வாரிசு' திரைப்படத்தையும் இவர் தயாரித்து வருகின்ற நிலையில் இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு 120 கோடி ரூபா சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அவர்களுக்கு அண்மையில் ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தப் புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வலைத்தள பக்கங்களிலும் இப்புகைப்படத்தை ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement