• Nov 19 2024

தனது சகோதரனின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடிய நடிகை அமலாபால்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் அமலாபால். இதனைத் தொடர்ந்து மைனா என்னும் திரைப்படத்தில் சூப்பராக நடித்து பல ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்படத்தில் கிடைத்த புகழைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று வருடத்திற்குள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்.

பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அமலாபால் தனது சகோதரனின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement