• Sep 20 2024

தளபதி விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்"- மகிழ்ச்சிப் பதிவி போட்ட உதயநிதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்புக்கும் நடனத்திற்கும் பாடலுக்கும் என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த வகையில் இன்று தளபதி விஜயின் பிறந்தநாள் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. மற்றும் அவரது பிறந்த நாளான இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இவ்விரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மிக கவனம் பெற்று வருகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பாலிவுட் கோலிவுட் என திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக மாறி இருக்கும் நடிகர் விஜய்.

இந்நிலையில் அவருடைய பிறந்த தினமான இன்று திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் "தளபதி விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறி கூறியுள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலினை அவரது கட்சியினர் தளபதி என்று அழைத்தவரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் விஜய் தளபதி என்று அழைத்து வாழ்த்தியது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement