• Sep 20 2024

“லேடி பவர் ஸ்டார் பட்டம்” பெற்ற தனுஷ் பட நடிகை- குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார். அத்தோடு தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

இவ்வாறு இருக்கையில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு சிறப்புப் பட்டங்கள் கொடுத்து அழைப்பது வழக்கம்.

மேலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர், கருணா நிதி- கலைஞ்சர், சிவாஜி- நடிகர் திலகம், பம் ரஜினி சூப்பர் ஸ்டார், கமல் – உலக நாயகன், அஜித் – தல, விஜய்- இளைய தளபதி, விஷால் புரட்சித்தளபதில், விஜயகாந்த் – புரட்சி கலைஞர் என்று அழைத்தனர்.

அதேபோல், நடிகைகளில் சாவித்ரி- நடிகையர் திலகம், கே.ஆர்.விஜயா- புன்னகை இளவரசி,நயன் தாரா – லேடி சூப்பர் ஸ்டார். என்று பட்டங்கள் கொடுத்தனர்.

இந்த நிலையில், சாய் பல்லவிக்கு லேடி பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement