• Sep 20 2024

சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற மாதவன்... குவியும் வாழ்த்துக்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா அபுதாபியில் கடந்த வெள்ளி, மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை ஏ. ஆர் ரகுமான் வழங்கி இருந்தார்.


இதனையடுத்து இந்த விழாவில், ராக்கெட்டரி படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக மாதவன் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இப்படத்தை ஆரம்பத்தில் வேறு ஒரு இயக்குநர் இயக்குவதாக இருந்தார். பின்னர் அவர் விலகியதால் மாதவனே இந்த படத்தை இயக்கி இருந்தார்.


மாதவன் சிறந்த ஒரு நடிகர் என்பதைத் தாண்டி தற்போது சிறந்த இயக்குநர் எனவும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற மாதவனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement