• Sep 20 2024

வருங்கால மனைவியின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடிய நவீன்-குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி இல் ஒளிபரப்பான நீலி சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த நடிகர் நவீன். தொடர்ந்து கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்து பிரபல்யமானார். சின்னத்திரையில் அவரது நடிப்புக்கு ரசிகர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

அவர் சன் டிவி இல் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தார்.அப்போது அவர்களுக்கு அதிகம் வாழ்த்துக்கள் குவிந்தன.நவீனின் இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இவர் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் ஜோடியாக நடிக்கும் ஹீமா பிந்துவை காதலிப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின.

ஆன் ஸ்கீரினில் ஹிட்டடித்த இந்தஜோடி நிஜத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை கூறி இருந்தனர். ஆனால் கடைசியில்வெளிவந்த அறிவிப்பு சற்று சர்ப்பிரைஸாக மாறியது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற அவர்கள் தங்கள் திருமணத்தை அறிவித்து இருக்கின்றனர். நவீன் - கண்மணி இந்த ஜோடிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.வருங்கால மனைவியான கண்மணியின் பிறந்த நாளன்று அவருக்கு பல சர்ப்பிரைஸ்களை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

கேக் கட்டிங், அவுட்டிங் என கண்மணியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர்செய்து உள்ளனர். இதற்கு இவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement