• Sep 21 2024

வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கும் ராஜா ராணி சீரியல் சித்து-குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் சித்து. இவருக்கு இந்த சீரியலில் கிடைத்த பிரபல்யத்தை அடுத்து இந்த சீரியலிலேயே கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணமும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.இதனை அடுத்து சித்து தற்பொழுது விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


அதே போல் அவரது மனைவி ஷு தமிழில் ஒளிபரப்பாகும் ரஜினி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.மேலும் சித்து சுமார் 6 வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகே நடிகர் வாய்ப்பை பெற்றார்

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து , நடிக்கும் தொடர்கள் அத்தனையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதால், இவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.


எனவே, சின்னத்திரையில் வெற்றி பெற்ற சித்து  தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க தயாராக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் வெள்ளித்திரையில் சித்து  ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement