• Sep 20 2024

முதன்முறையாக பிரபல நடிகையை தன்னுடைய பாட்னர் என வெளிப்படையாகக் கூறிய சித்தார்த்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாய்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்தது. அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் கோர்ட் சீன் காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.


ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, அவள், அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை என்று ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவதும் உண்டு.


மேலும் இன்று அதிதி ராவுக்கு பிறந்தநாள் என்பதால் சித்தார்த் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.அதிதியை தனது பார்ட்னர் என குறிப்பிட்டு ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி பதிவிட்டு இருக்கிறார் சித்தார்த்.அதற்கு கமெண்ட் செய்திருக்கும் அதிதி, "நீங்க poet என இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போய்விட்டதே" என குறிப்பிட்டு இருக்கிறார். 






Advertisement

Advertisement