• Nov 14 2024

உலக பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு பாராட்டுக்கள் - வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அமெரிக்காவில் வழங்கப்படும் அக்கடமி விருது எனப்படும் ஆஸ்கார் விருது உலகப் புகழ்பெற்ற ஒன்று . இவ்விருது சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் என பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

பல காலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கும் முன்னால் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படமாக சூரரைப்போற்று இருந்தது. பின்னர் அப்படம் நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் அக்கடமி அழைப்பு விடுத்துள்ளது.ஆஸ்கர் அக்கடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 நடிகர் சூர்யா மற்றும் பாலிவூட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவத்தைப் பெற்றுள்ள நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது நேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதை தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக ஆஸ்கார் விருது தேர்வுக் குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய இந்த உலக பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள் வானமே இல்லை என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement