• Sep 21 2024

கார்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சர்தார் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகராக விளங்குபவர் நடிகர் கார்த்தி. சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்து காணப்படுகின்றது.

அந்த வகையில் இவர் நடிப்பில் விருமன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகின்றார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இவருடன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement