• Sep 20 2024

ரஜினி வீட்டில் இணையும் புது வரவு-மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்..இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ரஜனிகாந்த்.இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தன் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்தார். முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கிறார்.

இதையடுத்து தொழில் அதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும், சவுந்தர்யாவுக்கும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி சென்னையில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து திருமணம் நடந்தது.

vishaganவேத் கிருஷ்ணாவை தன் சொந்த மகனாக பார்த்துக் கொண்டிருக்கிறார் விசாகன். இந்நிலையில் சவுந்தர்யா கர்ப்பமாகியிருக்கிறார்.மேலும் இன்றைய தினமும் இந்தியாவிற்கு 2 தங்க பதக்கம் ; காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியிலும் பதக்கம் குவிக்கும் இந்தியா

இதையடுத்து விசாகன் வீட்டில் வைத்தே கடந்த வாரம் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு நடந்தது.மேலும் அந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அத்தோடு வரும் அக்டோபர் மாதம் சவுந்தர்யாவுக்கு குழந்தை பிறக்குமாம். இந்த நல்ல செய்தி அறிந்த ரசிகர்களும், நலம் விரும்பிகளும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டுமே மகன்கள். இளைய மகளுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தை.மேலும் இந்த குழந்தை பெண்ணாக பிறக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி தனக்கு நிம்மதி, சந்தோஷம் இல்லை என்றார். எனினும் இந்நிலையில் புது வரவால் அவருக்கு நிம்மதியும், சந்ஷோமும் கிடைக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement