இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதோடு, வசூலில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் வினோத் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கி இருக்கிறார்.
Producer #VinodKumar has gifted a Luxury BMW Car to the Sensational Director #AdhikRavichandran for the 100 Crore #MegaBlockbusterMarkAntony 😍@VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @gvprakash @Adhikravi @riturv @selvaraghavan @suneeltollywood @ministudiosllp @editorvijay… pic.twitter.com/kuSTcTEHMq
மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!