பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி தற்பொழுது 52 நாட்களைக் கடந்துள்ளது.தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் கடுமையாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து அசீம் அடிடா பார்ப்போம் என்று எகிறி வந்ததாக ஷிவினிடம் அமுதவாணன் கூறுகின்றார். இதனால் ஷிவின் பிக்பாஸிடம் போய் சொல்லுங்க அசீமுக்கு ரெட் காட் கொடுப்பாங்க என்று கூறியுள்ளார். இதனால் அசீம் வெளியேற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.
#Shivin says red card is confirmed if #Azeem has beaten #Amudhavanan...and #Amudhavanan is pretty sure about itpic.twitter.com/h709EdMmqm#BiggBossTamil6
Listen News!