• Nov 10 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் தடவை எழுத்தாளராக களமிறங்கிய போட்டியாளர்! யார் அந்த பவா செல்லத்துரை?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதற்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்நிலையில் இம்முறை  பிக்பாஸ் சீசன் 7 இல் 18 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர் . அவர்களில் ஒருவர்தான் பவா செல்லத்துரை.


அந்த வகையில் கடந்த சீசன்களில் பொது வெளியிலிருந்து  பலர் கலந்து கொண்டாலும், ஒரு எழுத்தாளர் இன்று வரை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. அந்த பிம்பத்தை உடைத்து தற்போது தொடங்கியுள்ள 'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பவா  பங்கேற்று இருக்கின்றார்.


யார் இந்த பவா செல்லத்துரை?இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க புனைவெழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, களப்பணியாளர், திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி, அரசியலாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை வலுவாகச் சித்தரித்த படைப்பாளி. மனித வாழ்வின் அவலங்களையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் எழுதி புகழ் பெற்றவர்தான் பவாபவா செல்லதுரை.


இவர் தனது 16வது வயதில் உறவுகள் பேசுகிறது எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.  எழுதிய கதைகளில் சத்ரு, பச்சை இருளன்,ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் யாதார்த்த உணர்வுகளை கொண்டது. அத்துடன் இவர் குறும்படங்கள், திரைப்படம்,கதை சொல்லல், அரசியல், அமைப்பு பணிகள், ஆணப்படம் என பல கோணங்களில் இவரது பணிகள் இருந்தது.


இவர், ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். பின்பு தமிழ் சினிமாவில் பேரன்பு, சைக்கோ, ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சொல்வழிப் பயணம், இலக்கில்லா பயணங்கள், பங்குக்கறியும் பின்னிரவுகளும் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதிநாட்களில் கமல்ஹாசன் புத்தகங்களைப் பரிந்துரை செய்வது வழக்கம். கடந்த சீசனில் கதை சொல்லியான பவா செல்லதுரை பற்றி கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இம் முறை அவர் போட்டியாளராக கலந்து கொண்டமை அனைவரையும் வியக்க வைத்தும் குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement