பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கோவிலுக்கு காரில் சென்றிருக்கிறார். அப்பொழுது பிரேக் வேலை செய்யாமல் கார் விபத்துக்குள்ளானது. இதில் தனுஸ்ரீ தத்தா பலத்த காயம் அடைந்தார்.
இது குறித்து தன் புகைப்படங்களுடன் தனுஸ்ரீ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்..அதில் அவர் தெரித்ததாவது…
என் நம்பிக்கை கண்மூடித்தனமானது இல்லை. எலும்பு முறிவு இருக்கக் கூடாதென்று பிரார்த்தனை செய்தேன். அதனால் எலும்பு முறிவு இல்லை. இரண்டாவது மாடியில் இருந்தவர்களுக்கு கூட விபத்து சப்தம் கேட்டிருக்கிறது. ஆனால் எலும்பு முறியவில்லை. எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவள் தான். நான் தற்போது நலமாக இருக்கிறேன்.
என் காலில் இருக்கும் அதிகமான கொழுப்பால் எலும்பு முறியவில்லை. குண்டாக இருப்பதாலும் நன்மை இருக்கத் தான் செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார் தனுஸ்ரீ தத்தா. அதன் பின்னே இந்தியாவில் மீ டு இயக்கம் வேகம் எடுத்தது.
விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படம் மூலம் கோலிவுட் பக்கமும் வந்தவர் தனுஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!