• Sep 20 2024

நடிகை ரேகா நாயரோடு... Bigg Boss இல் களமிறங்கும் சர்ச்சை நாயகன்.. அப்போ சண்டை கன்பார்ம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சர்ச்சை பிரபலங்களை விஜய் டிவி தட்டித் தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 


அந்த வகையில் நடிகை ரேகா நாயர் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது பிரபல சினிமா விமர்சகரும், சர்ச்சை நாயகனும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொள்ளவிருப்பதாக மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் ஏற்கனவே இரவின் நிழல் பட பிரச்சனையால் ரேகா நாயரும், பயில்வான் ரங்கநாதனும் பப்ளிக் பிளேஸில் பயங்கர சண்டை போட்டிருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். எனவே கீரியும், பாம்பும் போல் இருக்கும் இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் சண்டை கன்பார்ம் என ரசிகர்கள்பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement