• Nov 15 2024

நடு விரலைக்காட்டி சர்ச்சைக்குள்ளான நாகசைத்தன்யாவின் இரண்டாவது காதலி- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நாகசைத்தன்யா. இவர் நடிகர் நாகார்ஜூன் மற்றும் அமலாவின் மகன் என்பதும் தெரிந்ததே. இதனால் இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இவர் 2017-ம் ஆண்டு நடிகை சமந்ததாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகளாக சந்தாஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரியப் போவதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் நடிகை ஷோபிதா துலிபாவை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறப்பட்டது. ஹிந்தியில் நடித்து வரும் நடிகை ஷோபிதா துலிபா, தமிழில் 'பொன்னின் செல்வன்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படியான வதந்திகளுக்கு சமந்தாவின் பிஆர் குழு தான் காரணம். அவர்கள் தான் இப்படியான தகவல்களை பரப்பி வருவதாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சமந்தா, இது தொடர்பாக பதிவிட்டவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், நடிகை சோபிதா வெளியிட்டுள்ள வீடியோவில் நடுவிரலை காமித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

https://twitter.com/SaiSanala/status/1540386335336173568

என்ன இதெல்லாம் என்றும், இப்படி செய்வது உங்களுக்கே தவறான செயலாக தெரியவில்லையா எனகேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement