தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர் என்பது தெரிந்ததே. தற்பொழுதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
சினிமாத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துக்கொண்டிருந்த சூரிக்கு 2009 ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் அவரை காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்தார்.
அதற்கு முன் 10 வருடங்களாக பல படங்களிலும், சிரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தற்போது சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியானது.
இந்நிலையில் இன்று நடிகர் சூரி அவரது அபார்ட்மெண்டில் தற்போது தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார். அத்தோடு அதன் புகைப்படத்தை சூரி வெளியிட்டு இருக்கும் நிலையில் அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
வீடு துடைக்கும் மாப் குச்சியில் அவர் தேசிய கொடி ஏற்றி இருப்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.
Listen News!