• Sep 20 2024

படப்பிடிப்புத் தளத்தில் அண்ணன் தம்பிக்கு இடையில் வெடித்த மோதல்- சர்ச்சையில் சிக்கிய நானே வருவேன் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தி கிரைமேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவும் காத்திருக்கின்றது.

இதில் நானே வருவேன் திரைப்படத்தை தனுஷின் அண்ணனான செல்வராகவன் இயக்கி வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று முழுப் படத்தையும் தனுஷ் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது.படத்தைப் பார்த்த தனுஷ் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் படத்தின் கதை தனுஷ் எழுதியது என்பதால் அவர் நினைத்த மாதிரி படம் வரவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக படப்பிடிப்பின் போதும் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement