• Nov 13 2024

ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசியதால் எழுந்த சர்ச்சை -திரையுலகினர் பலரும் எதிர்ப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு, இயக்குநர் நவீன், பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் தமது கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளது.

இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஓ மை கோஸ்ட்'.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் ட்ரெயிலர் சென்னையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இவ்விழாவில் சன்னி லியோன், சதீஷ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ் விழாவில் பேசிய நடிகர் சதீஷ், பாம்பேயிலிருந்து வந்திருந்த சன்னி லியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார். ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்துள்ளார் என்று கிண்டல் செய்து பேசினார். அத்தோடு நடிகர் சதீஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடை எப்படி உடுத்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 இவ்வாறுஇருக்கையில் பாடகி சின்மயி, இதுகுறித்து தனது கண்டனத்தை சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'இத்தனை கூட்டம் உள்ள இடத்தில் ஒரு பெண்ணை ஆடை அணிவது குறித்து சுட்டிக்காட்டி பேசுவது தவறு. இது ஒன்றும் காமெடி அல்ல. ஆண்கள் இதனை எப்போது நிறுத்துவார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.


 இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சன்னி லியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். மாற்றமே கலாச்சாரம்' என்று பதிவிட்டுள்ளார்.




Advertisement

Advertisement