விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'குக்வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியானது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் எப்போதுமே காமெடிக்கு பஞ்சம் இருப்பதில்லை.
அந்தவகையில் இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 4ஆவது சீசன் அட்டகாசமாக ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்த வாரம் யாரு இமியூனிட்டி வாங்குறாங்களோ அவங்க தான் இந்த வாரம் முதல் டாப் 5 குக் இல் ஒருவராக இருக்கப் போறாங்க எனக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது அவர்களை ரொம்ப ஈசியாக டாப் 5இனுள் அனுப்ப முடியாது எனவும் கூறப்படுகின்றது. அதாவது குக் எல்லோரும் கூண்டினுள் போகப் போறீர்கள் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறாக இதுவரை 3சீசனிலும் நடக்காத ஒரு நிகழ்வு நிகழ்வு நடக்கப்போவதாக கூறப்படுகின்றது. அவர்கள் கூறியதைக் கேட்டதும் குக் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அத்தோடு 50நிமிஷம் இந்த டாக்ஸை கோமாளிகள் செய்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!