• Sep 20 2024

TTF வாசனின் காதலியை வரவேற்க தயாரான விஜய் டிவி..? இதென்னடா புது ட்விஸ்ட்..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனில் ஷெஃப்  வெங்கடேஷ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் மற்றும் ஷெஃப் மாதம்பட்டி ரங்கராஜும், ஷெஃப் தாமுவும் களமிறங்கி உள்ளார்கள்.

இந்த சீசனில் பங்குபெற்றும் போட்டியாளர்களாக யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி, பிரியங்கா, நடிகர் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.


இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களான விஷ்ணு விஜய், பாண்டியன் ஸ்டோர் ஹேமா, சுனிதா, புகழ், குரேஷி, மோனிஷா மற்றும் விஜய் டிவி ராமர், நடிகர் கூல் சுரேஷ், தெய்வமகள் சீரியல் நடிகை ஆன ஷபி என்பவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசல் 5இல் யூடியூபர் டிடிஎப் வாசனின் காதலியும் கலந்துகொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


அதாவது, நடிகை ஷாலின் யூடியூப்பர் TTF வாசனுடன் நெருங்கி பழகி வருவதால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. நடிகை ஷாலின் சோயா கேரளாவை சேர்ந்தவர். 

இவர் தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது ஷாலின் சோயாவும் குக் வித் கோமாளியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement