வழக்கமாக அனைத்து தொலைக்காட்சிகளும் விதவிதமாக சமைக்க வைத்து அதில் திறமையானர்களை தேர்ந்து எடுத்த நிலையில், விஜய் தொலைக்காட்சி சற்று வித்தியாசமாக யோசித்து கோமாளிகளை வைத்து சமையல் நிகழ்ச்சியை நடத்தியது.
இதையடுத்து, குக் வித் கோமாளி சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதில், 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறினார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், இறுதி போட்டியில் மைம் கோபி, விசித்ரா, கிரண், சிவாங்கி, ஸ்ருஷ்டி மற்றும் ஆண்ட்ரியான் ஆகியோர் தேர்வான நிலையில், மைம் கோபி டைட்டிலை தட்டிதூக்கினார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்ரா பெற்றுள்ளனர். அவர்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதில், மைம் கோபிக்கு ரூ. 40 முதல் 50 ஆயிரம் வரை ஒரு எபிசோடுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில், விசித்ராவுக்கு ரூ. 30 ஆயிரமும், ஷெரினுக்கு ரூ. 35 ஆயிரமும், ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் ஆண்ட்ரியான் ரூ. 30 ஆயிரமும், விஜே விஷால் ரூ. 25 ஆயிரம், ராஜ் அய்யப்பா ரூ. 26 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஷிவாங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் என குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Listen News!