சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தர்ஷன்.இதனைத் தொடர்ந்து, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த கனா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் தர்ஷன் நடித்திருந்தார்.
இதற்கடுத்து, தும்பா என்ற திரைப்படத்தில் நாயகனாக தோன்றி இருந்த தர்ஷன், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு திரைப்படத்திலும் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
இதனிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கியதுடன் மட்டுமில்லாமல், 2 ஆவது இடம் பிடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்.அத்தோடு அது மட்டுமில்லாமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இன்னும் அதிக பிரபலம் ஆகவும் செய்திருந்தார் தர்ஷன்.
இவ்வாறுஇருக்கையில் , தர்ஷன் பெயரில் நடந்த மோசடி தொடர்பான செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் தர்ஷன் பெயரை தவறாக பயன்படுத்தி தான் ஆன்லைன் மூலம் பண மோசடி ஒன்று நடந்துள்ளது. பேஸ்புக் பக்கத்தில், தர்ஷன் புகைப்படத்தை வைத்து போலி ஐடி ஒன்றை மர்ம நபர்கள் உருவாக்கி காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், அந்த பெண்ணும் தர்ஷன் என நம்பி அவருடன் பேசி பழகி வந்துள்ள சூழலில், அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணையும் வாங்கி அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. அதே போல, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் மாறி மாறி அவர்கள் அனுப்பி வந்ததாக தெரியும் சூழலில், அந்த பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சோசியல் மீடியாவில் வெளியிட போவதாகவும் அந்த மர்ம நபர்கள் பெண்ணை மிரட்ட போவதாக தகவல்கள் கூறுகின்றது.
அதே போல, மிரட்டியே பெண்ணிடம் இருந்து 2 லட்ச ரூபாய் வரை பணம் பறித்ததாகவும் தெரிகிறது. இதன் பின்னரும் பணம் கேட்டு மிரட்டிய சூழலில், அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் பண மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சூழலில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன் மற்றும் வாகித் ஆகிய இருவர் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
அத்தோடு இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் தகவல் தெரிவிக்கும் நிலையில், ஒரு பேஸ்புக் ஐடி மூலம் இருவரும் அந்த பெண்ணுடன் பழகி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆன்லைன் பண மோசடி மற்றும் மிரட்டல் தொடர்பாக, அலாவுதீன் மற்றும் வாகித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Listen News!