சின்னத்திரையை பொறுத்தவரையில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.விஜய் டிவி-இல் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமானவர் சிவாங்கி.
இவருடைய எதார்த்தமான செய்கையினால் தொடந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.இந்நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பட வாய்ப்புகளை பெற்ற இவர் தற்போது தமிழில் உருவாகி வரும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் சிவாங்கி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகின்றார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது அந்த வீடியோ கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடந்து வருவது போல, இவரும் அதே முறையில் ஆடை அணிந்து தாடி வைத்து மாஸாக நடந்து வருகின்றார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வேற லெவல் சிவாங்கி என்று கமெண்ட்ஸ்களையும், லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.
Listen News!