• Sep 20 2024

குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் ஷிவாங்கி தானா?- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோ தான் குக்வித்கோமாளி.ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்பொழுது 4 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் குக்குகளும்,, கோமாளிகளும் செய்யும் லூட்டிகள் மற்றும் அவர்களை பாடாய்ப்படுத்தும் நடுவர்கள் என அனைவரும் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டு இருப்பதால் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இது ஜாலியாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.


இந்த நிலையில்  இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கிராண்ட் பினாலே ஷோ ஒளிபரப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அதற்கான ஷுட்டிங் நடைபெற்றது.

அதன்படி தற்பொழுது வெளியாகிய தகவலின் படி நான்காவது சீசன் டைட்டில் வின்னராக ஷிவாங்கி தேர்வாகியுள்ளதாக கூறப்படுகின்றது.கோமாளியாக இருந்து குக்காக மாறியதோடு டைட்டில் வின்னர் ஆனதற்காகவும் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement