நடிகர் கூல் சுரேஷ் பகாசுரன் திரைப்படத்தின் நிகழ்வில் அவர் இவ்வாறு பேசி இருந்தார் " இது என்னுடைய 100வது படம், இந்த படத்திற்கு பிறகு எனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றவாறு கூறியிருந்தார்.
மேலும் அவர் 'நான் ஊரில் இருந்து வந்தாலே ஒரே பர பரப்பாக இருப்பேன், ஆனால் இன்று அது முடியவில்லை தியேட்டர் போய் படம் பார்த்துட்டு கத்துவேன் என்ஜோய் பண்றத்திற்காக கத்துவோம்.
ஆனால் இன்று ப்ரெஸில் படம் பார்த்து விட்டு எல்லாரும் வந்து சொன்னார்கள் நீ இனி தியேட்டருக்கு போக வேண்டாம் நடிப்பதில் கான்செண்ரேட் பண்ணு என்று சொன்னார்கள். என்னை வழமையாக ஏதோ விதமாக எல்லாம் கூப்பிடுவார்கள் ஆனால் இன்று நடிகர் கூல் சுரேஷை கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள்.
இந்த படத்தில் நான் தனி கேரெக்ட்டரில் நடித்திருக்கிறேன். எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருக்கிறது. எல்லா படத்தையும் பார்த்துவிட்டு ஒண்ணு ஒண்ணு பேசுவியே இப்ப உன்னோட படத்தை பார்த்துவிட்டு எல்லாரும் எப்பிடி பேசப்போறாங்க பாரு என்று கூறினார்கள்.
தியேட்டர்ல நிறைய பேர் என்னோட படத்தை பார்க்கிறார்கள். என்னுடைய நண்பன் சந்தானத்திற்கு பிறகு மோகன் ஜி சார் தான் எனக்கு இந்த வாய்ப்பை தந்தார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்த படத்திற்கு பிறகு தான் நான் பிரபலமாகி இருக்கிறேன் என்று தேம்பி தேம்பி அழுதார்.
Listen News!