• Sep 20 2024

பிக் பாஸ் வீட்டிலிருந்து தப்ப சுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ்! யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீசனும் 70 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் மிஞ்சி இருக்கும் நிலையில், அவர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ் அங்கிருந்து வெளியேறும் நோக்கில், சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே வீட்டின் நியாபகமாக இருக்கு எனக்கூறிய கூல் சுரேஷ், போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்து வந்தார். 


அதன்படியே, சக போட்டியாளர்களும் அவரின் விருப்பப்படியே நாமினேட் செய்தனர். இதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் அவர் இடம்பிடித்து உள்ளார். 

இவ்வாறான நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற சுவர் ஏறிக் குதித்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து பிக் பாஸ் தலைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி பொறுமையாக இருக்க வைத்துள்ளார்.

எனவே, இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்தால் அது வெளியேற்றப்படும் நபராக அவரும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement