தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்பொழுது கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தான் சந்தானம். இவரது நடிப்பில் தற்பொழுது டிடி ரிட்டர்ன்ஸ் என்னும் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இப்படததை ப்ரமோஷன் செய்யும் பணியில் கூல் சுரேஷும் இணைந்துள்ளார்.
அந்த வகையில் வீதியில் நின்று டிரிங் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது என்றும் ஹெல்மட், சீட் பெல்ட் போட்டு வண்டி ஓட்ட வேண்டும் என்றும் நடிகர் கூல் சுரேஷ் விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தார். அதாவது Drink and Drive செய்யக் கூடாது என்றும் ஹெல்மட், சீட் பெல்ட் கட்டாயம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் .
எப்போதுமே தியேட்டர் வாசலில் முதல் நாள் FDFS கொண்டாட்டத்தில் வெந்து தணிந்தது காடு என சொல்லி அலப்பறையை கூட்டி வரும் கூல் சுரேஷ் என்னடா இப்படி புதுசா இறங்கி இருக்காரே என ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரது வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.
அப்போது அந்த சாலையில் சிவாங்கி தனது காரில் வந்துக் கொண்டிருக்கும் போது, அவரை வழிமறித்த கூல் சுரேஷ் சிவாங்கி சீட் பெல்ட் போடாமல் காரில் செல்லக் கூடாது என்றும் பிரபலங்கள் ஆகிய நாமே ரூல்ஸை மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ஃபாலோ பண்ணுவாங்க என வச்சு செய்து விட்டார்.
மேலும், டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது சிவாங்கி என சொல்லி நடுரோட்டில் சிவாங்கியை டோட்டலாக டேமேஜ் செய்து விட்டார் கூல் சுரேஷ். ஹெல்மட் போடாமல் பைக்கில் செல்லும் நபர்களையும் நிறுத்தி அவர்களுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!