• Sep 20 2024

கிங்குடன் நுங்கு விற்ற கூல் சுரேஷ்... இப்படி அலப்பறையை கிளப்பிட்டாரே..!!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் நடிப்பில் 'இங்க நான் தான் கிங்கு' என்ற படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அழித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இன்றைய தினம் வெளியான இங்க நான் தான் கிங்கு என்ற படத்தில் நடிகர் சந்தானத்துடன் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடத்து  உள்ளார்கள். இந்த படத்தை ஆனந்த் நாராயணன் இயக்க கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் சந்தானத்துக்கு ஜோடியாக ப்ரியாலா நடித்துள்ளார்.


இந்த நிலையில்,   'இங்க நான் தான் கிங்கு' படத்திற்கு பிரமோஷன் மேற்கொண்டுள்ளார் நடிகர் கூல் சுரேஷ். அதில் இங்கு நான் தான் கிங்கு வந்து சாப்பிடுங்க நுங்கு என்று அவர் பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்தாலும் ஒரு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது பல படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். அண்மையில் கன்னி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெண் வேடத்தில் இவர் சென்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement