• Sep 20 2024

ரசிகர்களால் அடித்து நொருக்கப்பட்ட கூல் சுரேஷின் கார் ..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் ரசிகர்கள் சுக்குநூறாக கூல் சுரேஷின் காரை நொறுக்கி இருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு.இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம்  திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்த படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது.

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். 

மேலும் இந்த நிலையில் கூல் சுரேஷின் காரை சிம்புவின் ரசிகர்கள் சுக்கு நூறாக நொறுக்கி இருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. அதாவது, வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை ஒட்டி சிம்புவின் ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ்  இன்று திரையரங்கிற்கு வந்திருக்கிறார்.


சிம்புவின் ரசிகர்கள் கூல் சுரேஷின் காரை சூழ்ந்து அவரிடம் புகைப்படம் எடுப்பது, படத்தைக் கொண்டாடுவது என்று உற்சாகத்தில் இருந்தார்கள். அப்போது தீவிர ரசிகர் ஒருவர் கூல் சுரேஷின் கார் கண்ணாடியின் மீது ஏறி அவரிடம் புகைப்படம் எடுத்தார். இருந்தும் கூல் சுரேஷ் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சிம்புவின் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து ‘வெந்து தணிந்தது காடு தலைவர் எஸ் டி ஆருக்கு வணக்கத்தை போடு என்று கொண்டாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement