• Nov 19 2024

முகம் காட்ட மறுத்த அமலாவைப் போல் முகத்தை மூடிய கொரோனா

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளவயசுப் பசங்க இளவயசுப் பொண்ணுங்களின் அழகைப் பார்த்து சைட் அடிப்பாங்க. அவங்க பொண்ணுங்களின் முகத்தைப் பார்க்க விடாமல் கொவிட் -19 அதாவது கொரோணாத் தொற்று நோய் ரொம்பக் கஸ்ரத்தைக் கொடுத்திட்டுதுங்க.

அப்போதெல்லாம் 1980 தமிழ் சினிமா உலகம் தெரிந்தோர் சொல்லுவாங்க ம்….ம்……மெல்லத் திறந்தது கதவு அமலா போல நம்ம நிலைமை ஆயிடிச்சு. மெல்லத் திறந்தது கதவு அமலா போல எல்லாப் பொண்ணுங்களும் ஆளுக்கு ஒரு மாஸ்க் போட்டுகிட்டுத் திரிகிறாங்க. எந்தப் பொண்ணு அழகான பொண்ணு எந்தப் பொண்ணு அழகு குறைந்த பொண்ணு எனத் தெரியலேயப்பா எனத் தவிச்சாங்க. அடடா யார் அந்த அமலா. மெல்லத் திறந்தது கதவு படம் எப்புடியென இளவட்ட ரசிகர்கள் எல்லாம் புறப்பட்டாங்க.

1986 இல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் மோகன், அமலா, ராதா ஆகியோர் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். இசைஞானி இளையராஜா,மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கூட்டணி அமைத்து இசையமைத்த இப் படத்தின் பாடல்கள் ஆறுமே காலம் கடந்தும் செம ஹிட். வாலி,கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதினார்கள். வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே…….தில் தில் மனதில்…….தேடும் கண்பார்வை …..,குழலூதும் கண்ணனுக்குக் குயில்பாடும் பாட்டுக் கேட்குதா …..ஊரு சனம் தூங்கிடிச்சு ……..சக்கரக் கட்டிக்கு…… என ஆறு பாடல்களையும் இசையின் இரு சக்கரவர்த்திகளும் ரொப் ரென் வரிசையில் வைத்தார்கள். வா வெண்ணிலா உன்னைத் தானே தேடுதே ….பாடல் படத்தில் இரு முறை இடம் பெறுகிறது.

படத்தின் நாயகி அமலா ஒரு முஸ்லீம் பெண்ணாக வருகின்றார். முகத்தை மறைத்துப் பர்தா அணிந்திருப்பார். அவரது நடை உடை பாவனையிலும் குரலிலும் வசியப்பட்டு மோகன் காதலிக்கின்றார். அமலாவும் தனது காதலை வாய் திறந்து சொல்லாமல் தனது நளினத்தால் சொல்கின்றார். காதலைச் சொல்வதற்காக ஒரு நாளைக் குறித்து தனது மனம் கவர்ந்த மோகனை வரச் சொல்கின்றார். சவுக்கங் காட்டுப் பிரதேசத்தில் தேடும் கண்பார்வை தவிக்கத் துடிக்க …..எனும் பாடலுடன் மோகன் அமலாவைத் தேடுகின்றார். பர்தா போடாத அமலா பாடலுடன் இணைந்து மோகனைத் தவிக்க வைக்கின்றார். மோகனுக்கு முகத்தைக் காட்ட வேண்டிய நேரம் வரையில் பாடலுடன் இணைகின்றார். அப்படியே மோகனை ஏமாற்றி ஏமாற்றி சவுக்கங்காட்டில் புதைகுழியில் விழுந்து புதைந்து போகின்றார்.

அமலாவைத் தேடி வரும் மோகன் புதைகுழியில் முகம் மறைந்து கண்கள் மட்டும் தெரியும் நிலையில் அமலாவைக் காப்பாற்றத் துடிக்கின்றார். புதைகுழியில் முற்றாக மறையும் நிலையிலுள்ள அமலாவிற்குக் கைகளைக் கொடுத்துக் காப்பாற்ற முற்படுகின்றார். அமலாவின் கை ஒன்று புதைகுழியின் மேலே தெரியும் நிலையில் முற்றாக மறைந்து இறந்து போகின்றார். முகம் பார்க்காமலே ஒருவரைத் தினம் காணும் நிலையை வைத்து மெல்லத் திறந்தது கதவு அமலா போல எனும் குறியீட்டுப் பெயர் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement