கோலிவுட் திரையுலகில், உச்சகட்ட நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் - விஜய் ஆகிய இருவரது நடிப்பிலும் கடந்த 11ம் திகதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்ற திரைப்படம் தான் வாரிசு - துணிவு.இப்படங்கள் இரண்டிற்கும் ரிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜனவரி 12, 13, 18 ஆகிய தேதிகளில் இரண்டு படங்களுக்குமே கூடுதல் சிறப்பு காட்சிகளை வெளியிட அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை நாட்களில், இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு இருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் துணிவு - வாரிசு ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பொங்கல் ரேஸில் விஜயை விட அஜித்தின் துணிவு படம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இது கூட்டிட்டு தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மூன்றே நாட்களில் உலக அளவில் துணிவு திரைப்படம் 100 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.
உலக அளவில் முதல் நாளில் 50.20 கோடியும், இரண்டாவது நாளில் 28.18 கோடியும், மூன்றாவது நாளில் 24.76 கோடி என மொத்தம் 103.14 கோடி வசூலித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வாரிசு படம் வசூல் குறித்து வெளியாகி உள்ள தகவலில், முதல் நாளில் 39 .65 கோடியும், இரண்டாவது நாளில் 20.39 கோடியும், மூன்றாவது நாளில் 18.41 கோடி வசூலித்துள்ளது.வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு, தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரே மாதிரியான வரவேற்பு கிடைத்து வந்தாலும் வெளிநாடுகளில் 'வாரிசு' படத்தை விட 'துணிவு' படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்து வருவது தான் 3 நாட்களிலேயே துணிவு 100 கோடியை எட்ட காரணமாக பார்க்கப்படுகிறது.
Listen News!