• Nov 14 2024

ஐஸ்வர்யா வீட்டில் நிகழ்ந்த கொள்ளை.. நிபந்தனை ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டின் லாக்கரில் வைத்திருந்த கோடிக்கணக்கு மதிப்பிலான தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.  


இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்திருந்தனர். அதில் முக்கிய நபரான ஐஸ்வர்யா வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.  

அத்தோடு கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து  100 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 30கிராம் வைர நகைகள், திருடிய நகைகளில் வாங்கப்பட்ட 1கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை போலீசார் விசாரணையில் பறிமுதல் செய்தனர். 


இதனையடுத்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்பு இவர்களுடைய ஜாமின் மனுவானது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இவர்களுடைய வழக்கறிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தொடர்ச்சியாக அவருடைய வாதங்களை தீவிரமாக முன் வைத்தார். 

இதனைத் தொடர்ந்து அனைத்து விதமான பொருட்களும் திரும்ப பெற்ற காரணத்தினால் நீதிபதி ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாது இந்த உத்தரவில் தினந்தோறும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்து போட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement