• Sep 21 2024

லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...நிழலாய் பின் தொடரும் சர்ச்சை

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்க் கவிஞர், ஆவண நிழற்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட ஒருவரே லீனா மணிமேகலை. இவருடைய படைப்புக்களின் கருப்பொருட்களாக பெண்கள் உரிமைகள், பாலியல், ஈழப் போராட்டம், சமூக ஒடுக்கு முறைகள் போன்றவை அமைந்துள்ளன.

இந்நிலையில் இவர் தற்போது 'காளி' என்கிற ஆவணப்படம் ஒன்றினை இயக்கி வருகின்றார். இந்த ஆவணப்படத்தினுடைய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அந்தப் போஸ்டரில் காளி வேடமிட்ட பெண் ஒருவர் கையில் LGBT கொடி மற்றும் வாயில் சிகரெட் உடன் போஸ் கொடுத்திருந்த புகைப்படம் இடம்பெற்று இருந்ததனால் இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது.

இந்தப் போஸ்டர் ஆனது இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி இவருக்கு எதிராக பல எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பின. அதுமட்டுமின்றி அப்படத்தினுடைய இயக்குநரான லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் பலர் குரல் கொடுத்து வந்தனர். இதற்கெல்லாம் கொஞ்சம் கூடி அசராத லீனா மணிமேகலை "இதற்கெல்லாம் நான் அஞ்சவே மாட்டேன்" எனப் பதிலடி கொடுத்திருக்கின்றார்.

இவர் மீது எதிர்ப்புகள் அதிகரித்து வந்ததன் காரணமாக ட்விட்டர் நிறுவனம் லீனா மணிமேகலை வெளியிட்ட 'காளி' படத்தினுடைய போஸ்டரை உடனே நீக்கியது. இதனைத் தொடர்ந்து மணிமேகலை மறுபடியும் சிவன் - பார்வதி வேடமணிந்த இருவர் ஜோடியாக நின்று புகைப்பிடிக்கும் போட்டோவை ட்விட்டரில் ஷேர் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் இந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது வழக்கறிஞர் ராஜ் கவுரவ் இந்துக் கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வாதிட்டுள்ளார். இதையடுத்து இயக்குநர் லீனா மணிமேகலையும் மற்றும் அவருடன் இணைந்து 'காளி' படத் தயாரிப்பாளரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றில் உத்தரவிடப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement