ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடத்தே அமோக வரவேற்பை பெற்றது.
மேலும் இப் படத்தில் அக்னிச் சட்டி படம் கொண்ட காலண்டர் இருந்தது. இது வன்னியர் சமூகத்தை அவமதிப்பது போன்று இருக்கிறது என்று புகார் எழுந்தது. இதனால் அந்த காட்சியை நீக்கினார்கள். வன்னியர் சமூகத்தினரின் மனதை புண்படுத்தியதற்காக சூர்யா ரூ. 5 கோடி கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்.
இதையடுத்து ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். அத்தோடு ஜெய்பீம் படத்தில் உள்நோக்கத்துடன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.
அதனால் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று ருத்திர வன்னிய சேனா அமைப்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்தோடு அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ருத்திர வன்னிய சேனா அமைப்பின் புகாரில் முகாந்திரம் உள்ளது. அதனால் ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று உத்திரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மே 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?
- Kgf2 திரைப்படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?
- மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்
- சினிமாவில் உள்ள இரண்டு ‘டான்’ களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
- அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!