• Nov 14 2024

இயக்குநர் லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சுயாதீன திரைப்பட இயக்குநராக இருப்பவர் தான் லீனா மணிமேகலை. இவர்பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த ஜுலை 2ம் திகதி கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா‘ என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் திரையிடப்பட்டது.

அதில் இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில், போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

டொரோண்டாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்திய தூதரகம் அறிவுறுத்தலின்படி,லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

‘’காளி’’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால் காவல்துறை லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

Poster of the documentary 'Kaali', Leena Manimekalai

மேலும், மணிமேகலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்துக்கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இதைக்கேட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement