சினிமா, அரசியல் என இரண்டிலும் சிறந்து விளங்கிய ஒருவரே ஜே.கே.ரித்தீஷ். இவர் தமிழில் 'கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி' போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். அரசியல்வாதியான இவர் இராமநாதபுரத்தில் இருந்து எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென தனது 46 வயதில் மரணம் அடைந்தார். இவரின் மனைவியான ஜோதீஸ்வரி, காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளையும் வெள்ளி பொருட்களையும் வாங்கி இருக்கிறார்.
ஆனால் பணத்தை கொடுக்காமல் அதற்குப் பதிலாக ரூ.20 லட்சத்துக்கான 3 காசோலையை வழங்கி இருக்கிறார். இந்த காசோலையை வாங்கிய திருச்செல்வம் அதனை வங்கியில் செலுத்தியபோது தான் அதில் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜோதீஸ்வரி தான் பணத்தை மொத்தமாக தந்துவிடுவதாக திருச்செல்வமிடம் கூறி இருக்கிறார் ஜோதீஸ்வரி. ஆனால் சொன்னபடி பணத்தை தராமல் இழுத்தடித்ததால் ஜோதீஸ்வரி மீது காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபிரதா, ஜோதீஸ்வரிக்கு ரூ.60 லட்சம் அபராதமும், 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இவ்வாறாக பிரபல நடிகரின் மனைவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!