தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் பல வருடங்களாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தைத் நடத்தி வருகிறார்.இவருடைய தயாரிப்பில் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நள தமயந்தி, விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவரது நடிப்பில் கடந்த மாதம் ஜூன் 3ந் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பல்வேறு சாதனைகளை படைத்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை விக்ரம் படம் சமீபத்தில் படைத்தது.
உலகம் முழுவதுமான வசூல் ரூ.450 கோடியை நெருங்குகிறது. இந்நிலையில்,சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், கிரிகெட் வீரர் தோனியிடம் பலர் கேட்பார்கள் எப்படி நீங்க இப்படி விளையாடுகிறீர்கள் என்று, தோனி எப்போதும் விளையாட்டை பற்றி மட்டும் தான் யோசிப்பார் வெற்றி பற்றி அல்ல, விளையாட்டை பற்ற மட்டும் யோசித்தால் மட்டுமே பிரஷர் வராது சென்சுரி வரும். அதே போல எதிரி என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டே இருந்தால் நாம் தடுக்கி விழுந்து விடுவோம்.
இதுபோன்று பல நபர்கள் சினிமாத்துறையிலும் இருக்கிறார்கள். என்ன இந்த படம் நல்ல ஓடுதோ என்று யோசிப்பதை விட்டுவிட்டு, நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாலே நமக்கு வெற்றி கிடைக்கும் என்று வாழ்க்கையில் வெற்றி பெறும் ரகசியம் குறித்து அழகாக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்டிவியின் முக்கிய சீரியலில் கமிட்டான கோகுலத்தில் சீதை தொடரின் கதாநாயகன்- அடடே இந்த நடிகரா?
- படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்த கோமாளி பட நடிகை
- போதையில் காரை அதிவேகமாக ஓட்டிய நடிகை- பதுங்கி இருந்து மடக்கிப் பிடித்த போலீஸார்- பாலியல் தொழிலும் செய்தவரா இவர்
- குடும்பத்தினருடன் இலை சாப்பாடு- தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் குக்வித் கோமாளி வித்யுலேகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!