• Sep 20 2024

Cup மட்டும் வெற்றியை தீர்மானிக்காது அதை வீட்டில மட்டும் வச்சிருக்கலாம்- அசீமை குத்திக் காட்டிய ஏடிகே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் சமீபத்தில் நடைபெற்றிருந்தது.சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்

 கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், சவாலான டாஸ்க் என மொத்தமும் இந்த பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் தான் இருந்தது.இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை விக்ரமன் ஷிவின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நிறைய நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் பரவலாகவும் இருந்து வருகிறது.இந்த நிலையில், பிரபல சேனல் நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார்.

 அப்போது அவரது பெற்றோரும் கலந்து கொண்டு மகன் விக்ரமன் குறித்து பேசி இருந்தனர். மேலும், வீடியோ கால் மூலம் பேசிய அவர் தங்கையும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதே போல, பிக் பாஸ் வீட்டில் விக்ரமனின் நெருங்கிய நண்பராக இருந்த ADK -வும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது, விக்ரமனுக்க்கு கைவளையம் ஒன்றை அளித்ததுடன் கையில் அணிவிக்கவும் செய்தார் ADK.


அந்த சமயத்தில் பேசி இருந்த ADK, "கோப்பை மட்டுமே ஒருத்தரோட வெற்றியை தீர்மானிக்காது. அவருடைய எண்ணம், பயணம், அது மட்டுமில்லாம அவரோட உண்மையான தன்னம்பிக்கை எதுன்னா வெற்றியை நோக்கி போகும் போது அடுத்தவனை தாழ்த்தாம போறது தான் உண்மையான வெற்றி. அப்ப நானும் வெற்றி பெற்றிருக்கேன், இவரும் (விக்ரமன்) வெற்றி பெற்றிருக்காரு. அது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

யார் வின் பண்ணனும்ன்னு கேட்டீங்கன்னா நான் நெறய இடத்துல விக்ரமனை தான் சொல்லி இருக்கேன். அதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. எல்லாருமே இந்த இடத்துல ஒண்ணு புரிஞ்சுக்கணும். கோப்பை உங்களை வெற்றியாளராக ஆக்காது. அத வீட்டுல வெச்சுக்கலாம். வெற்றிங்குறது சமுதாயம் நம்மளை எப்படி ஏற்றுக் கொள்கிறது அப்படிங்குறது தான்" என பேசி உள்ளார்.


Advertisement

Advertisement