தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியவர் தாக் சின்மயி.அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. இதனை அடுத்து இவர் தென்னிய மொழிகளில் பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.
இவர் 2018 ஆம் ஆண்டு, இவர் பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போட்ட பதிவு ரசிகர்களை பெரும் குழப்பில் ஆழ்த்தியது.அத்தோடு தொடர்ந்தும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது வயதானவர்களை குறிவைத்து நடக்கும், நூதன பண மோசடி குறித்து இவர் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில், நாம் OTP எண்ணை பகிர்ந்தால் மட்டுமே பணம் பறிபோவதாக கூறப்பட்டு வந்த நிலையில், OTP-எண்ணை பகிராமலேயே நூதன மோசடி நடைபெற்று வருவதாகவும், இப்படி தன்னுடைய குடும்பத்தினர் பல லட்சத்தை இழந்துள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
அதாவது தொலைபேசிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்ததும் வங்கியில் இருந்த பணம் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். வயதானவர்களை குறி வைத்தே இதுபோன்ற மோசடிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ள சின்மயி, சைபர் கிரைமில் இதுகுறித்து புகார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Listen News!