தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதாவது சுராஜ் இயக்கத்தில் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
மேலும் லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள இந்தப் படமானது வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக மாண்டஸ் புயல் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. புயல் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்பதால், அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தன. இதனால், திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைவடைந்தது.
இதன் காரணமாகவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது நாளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், இப்போது அதிலும் படக்குழுவுக்கு அதிர்ச்சி தான் கிடைத்துள்ளது.
அதாவது முதல் நாளிலே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், இரண்டாவது நாள் வசூலும் சற்றுக் குறைந்துள்ளது. அதன்படி, இந்தப் படமானது இரண்டாவது நாளில் 1.2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் மொத்தம் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இதுவரை 3 கோடி ரூபாய் வசூலை தொடமுடியாமல் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!