• Nov 10 2024

சோத்துக்காக நான் தாளம் போடல- பஞ்ச் டைலக் பேசிய ஆசிரியைக்கு பதிலடி கொடுத்த டி.ராஜேந்தர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் என்னென்ன துறைகள் உண்டோ, அவை அனைத்திலும் புகுந்து புறப்பட்டவரை ‘சகலகலாவல்லவர்’ என்று சொல்வார்கள். சினிமாவின் எட்டு துறைகளில் பங்களித்து பரிமளித்து ‘அஷ்டாவதானி’ எனும் அடைமொழியைப் பெற்றவர் டி.ராஜேந்தர். 

எவரிடம், எந்தத் துறைக்காகவும் உதவியாளராக இல்லாமல், அதேசமயம் எவரையும் பின்பற்றாமல், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, ஒரு ஏகலைவனைப் போல் ஜெயித்துக்காட்டியவர் இவர் எனலாம்.


டி.ராஜேந்தர் தான் இயக்கும் படங்களுக்கு தானே இசையமைத்துள்ளார்.தற்போது நான் கடைசி வரை தமிழன் என்ற படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் கூறியதாவது. அதாவது இந்த படத்தை  எம். ராஜேந்தர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் 163 மொழிகளில் உருவாக்குவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் எம்.ஏ.ராஜேந்திரன். அவருக்கு எனது பாராட்டுக்கள். இங்கு நான் வருவதற்கு காரணம் இறைவன் மட்டும்தான். நேற்று இரவு வரை ஹைதராபாத்தில் இருந்தேன். ராஜேந்திரன் என்ற பெயரில் திறன் என்பதை நான் பார்க்கிறேன். இந்தப் படத்துக்கு இசையமைக்க காரணம் டைட்டில் மட்டும்தான்.

பன்னாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசையமைப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். ஒரு படத்துக்கு வசூலை இசையும் ஈட்டிக்கொடுக்கும். இதற்கு உதாரணம் நானும் எனக்கு முன்னால் இருந்த கலைஞர்களும்தான். கலையும், ஞானமும் இல்லாமல் சினிமாவில் இருக்க முடியாது. பள்ளியில் தாளம் போடும்போது எனது ஆசிரியர் என்னிடம், 'சோத்துக்கு தாளம்தான் போட போறனு சொன்னார். நான் உடனே, சோத்துக்கு தாளம் போடமாட்டேன் நான் போடும் தாளம்தான் சோறு போடும் என்று சொன்னேன்' என்று கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement