• Nov 15 2024

அப்பாவின் உடல்நிலமை பின்னடைவு தான்- விஜயகாந்தின் மகன் கூறிய அதிர்ச்சித் தகவல்- கடும் சோகத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் மிகவும் வித்தியாசமானவர் கேப்டன் விஜயகாந்த். நடிப்பு, அரசியல் என ரொம்பவே பரபரப்பாக இருந்த விஜயகாந்த், தற்போது உடல்நலக் குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.இவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களாலும் தொண்டைக் குழாய் தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றாராம்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய பூர்வீக கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகத்திற்காக இன்று வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருக்கிறேன் என்றார்.


அப்போது செய்தியாளர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜய பிரபாகரன், கேப்டன் உடல்நலம் சற்று பின்னடைவுதான் ஆனால் கேப்டன் நன்றாக உள்ளார், அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார். ஆனால் பழையபடி பேசுவாரா? நடப்பாரா என்றால் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.


உங்களைப் போலவே நாங்களும் அவர் குணமடைவார் என்று நம்புகிறோம். ஆனால், இப்போது அவர் நன்றாக இருக்கிறார் என்றார். விஜய பிரபாகரனே சற்று பின்னடைவு தான் என கூறியுள்ளதால், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement