விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் என்றாலே சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா தான். தனது கலகலப்பான பேச்சினாலும், சத்தமான சிரிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
இந்நிலையில் இவர் மகாபா ஆனந்துடன் இணைந்து வழங்கும் "சூப்பர் சிங்கர்" என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி இருக்கின்றார். இவரை யாராவது கோபமாகத் திட்டினாலும் சரி, வெறுப்பாக ஏசினாலும் சரி அது எதையுமே பொருட்படுத்தாமல் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு எப்போதும் கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு நடத்துவார்.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 இலும் போட்டியாளராகப் பங்குபற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருந்தார்.
அதாவது அந்த நிகழ்ச்சியில் அவரது கணவனை பற்றி பேசாததால் கணவனை பிரிந்து விட்டதாகப் பலரும் வதந்திகளை பரப்பியிருந்தனர். எனினும் இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முதல் வீடியோ ஒன்றினூடாக கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்புத் தொடர்பான தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது. அதாவது பிரியங்காவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $1.16 மில்லியன் எனக் கூறப்படுகிறது.
அடடே நம்ம பிரியங்காவிற்கு இவ்வளவு சொத்து இருக்கா? என்று வியந்த அவரது ரசிகர்கள் தற்போது இத்தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!